Thursday, February 18, 2016

India's first ever cheapest smart phone


Hi Friends,

Today India's First Smart Phone is getting launched for Rupees 251.

Specification:

  • Good Screen Size 4 inch
  • Android 5.1 lollipop
  • Better Battery 1450 mah   
  • 1.3 GHZ Quad core Processor
  • 1 GB RAM
  • 8 GB Internal Storage
  • SD Card Support up-to 32 GB
  • 3.2 MP Rear Camera
  • 0.3 MP Front Camera
  • 3G Connectivity
  • 1 year warranty

Book this phone from the below link

* Note Read the Terms and condition in the web page before booking

வாழ்க பாரதம் 








Wednesday, February 10, 2016

Bermuda Triangle

The Bermuda Triangle
அறிவியலாலும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளில் ஒன்று தான் பெர்முடா முக்கோணம். வடஅட்லாண்டிக் பெருங்கடலில் பெர்முடா, மியாமி, போர்டோரிகோ ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்தால் ஒரு முக்கோண வடிவம் கிடைக்கும். இந்த முக்கோண கடல் பகுதியை தான் “பெர்முடா முக்கோணம்” என்கின்றனர். இது சாத்தான்களின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பகுதியில் கப்பல்கள் காணாமல் போவதும் விமானங்கள் மறைந்துவிடுவதும் உண்டு. விடை தெரியாத சில இயற்கை வினோதங்களில் மிக மிக முக்கியமானது “பெர்முடா முக்கோணம்’.
இந்த முக்கோண பரப்புக்குள் வந்த கப்பல்கள், விமானங்கள் பல உரிய இடத்திற்கு போய் சேரவில்லை. புறப்பட்ட இடத்திற்கும் திரும்ப வரவில்லை. இவை அந்த முக்கோண பரப்புக்குள்ளேயே மாயமாக மறைந்து விடும்.ஏன் இந்த கப்பல்கள் இவ்வாறு காணமால் போகின்றன என்பதை ஆராய்வதற்காக 40 கப்பல்கள், 20 அதிநவீன விமானங்கள் சென்றன. ஆனால், அவற்றையும் காணவில்லை. 1872-ல் அந்த பகுதிக்குள் அப்பாவியாக தலை நீட்டிய மேரி செலஸ்டின் என்ற கப்பல்தான் முதன்முதலாக மாயமானது. தொடர்ந்து “மெடர்’, “சைக்கேளாப்ஸ், கரோல்ஏடீரிஸ், கன்னிமரா போன்ற பிரமாண்ட கப்பல்களும், பிளைட் 19, ஸ்டார் டைகர் போன்ற போர் விமானங்களும் இந்த கடல் எல்லையின் மேல் மிதந்த மற்றும் பறந்த சுவடுகளே இல்லாமல் மாயமாகி விட்டன. இதனுள் பயணம் செய்த ஆயிரக்கணக்கான மக்களும் பலியானார்கள்.
நடந்து என்ன?
என்ற ஆராய்ச்சியில் நிபுணர்கள் களத்தில் குதித்தனர். வாலண்டைன் என்ற கடல் ஆராய்ச்சியாளர் கப்பல்கள் எங்கும் போகவில்லை. அவை எல்லாமே அங்குதான் வேறொரு பரிணாமத்தில் நிற்கின்றன என்று குழம்பினார். அமெரிக்கா விஞ்ஞானிகள் முக்கோண ஏரியாவுக்குள் கிடப்பொருட்கள் சின்னச்சின்ன அணுக்காளாக உடைந்து விடுவதால் பொருட்கள் மாயமாகி விடுகின்றன என்று கூறினார்கள்! ஏலியன்கள் (வேற்று கிரக மனிதர்கள்!) தாக்குதல், மிக அதிகமான புவியீர்ப்பு விசை, கடலின் நீரோட்டத்தில் இருக்கும் மின்னோட்டம் என்று ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். ஆனாலும் பெர்முடா முடிச்சு அவிழ்ந்தபாடில்லை.
உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்ப்படும் இது போன்ற நிகழ்வுகள், பெர்முடா முக்கோணம் பகுதியில் ஏற்ப்படும் பொது அது மிகைப்படுத்தப்பட்ட வதந்திகளாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது வெறும் வதந்தி அல்லது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்று உறுதியாக கூறமுடியாததற்கு காரணமும் உண்டு.
பூமியை சுற்றி மின்காந்த அலைகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. சில இடங்களில் இதன் தாக்கம் அதிகமாகவும் இருக்கும். புவியீர்ப்பின் வடதுருவமும், காம்பசின் வடதுருவமும் சேரும் இடத்தில் மின்காந்த ஈர்ப்பினால் காம்பஸ் சீரற்ற முறையில் இருக்கும். இதன் காரணமாக அப்பகுதியில் செல்லும் கப்பல்களோ, விமானம்களோ திசைமாறி சென்று எதன் மீதோ மோதி விபத்து ஏற்ப்பட வாய்ப்புள்ளது. smile emoticon‪#‎joshua‬